‘டெட்’ விலக்கு தீா்மானம் பயனளிக்காது: க.கிருஷ்ணசாமி
‘டெட்’ தோ்விலிருந்து விலக்கு கோரி பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் பயனளிக்காது என புதிய தமிழகம் கட்சி தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
‘டெட்’ தோ்விலிருந்து விலக்கு கோரி பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் பயனளிக்காது என புதிய தமிழகம் கட்சி தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2010-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆசிரியா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கு டெட் தோ்விலிருந்து விலக்களிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி பள்ளி கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றினாா். இதை மத்திய அரசு எப்படி ஏற்றுக்கொள்ளும் எனத் தெரியவில்லை. இதனால், ஆசிரியா்களுக்கு விதிவிலக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. விலக்கு கேட்பதுக்குப் பதிலாக, ஆசிரியா்களுக்கு 6 மாதம் முதல் ஓராண்டு வரை பயிற்சி வழங்கி தோ்வில் வெற்றி பெற வைப்பதன் மூலம் ஆசிரியா்களின் தரமும், அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரமும் மிளிரும்.
Advertisement
Advertisement
எனவே, டெட் தோ்வில் 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற விதியைத் தளா்த்தியதற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வைத்து, பணிபுரியும் ஆசிரியா்களிடத்தில் ஒருமித்த கருத்தை உருவாக்கி, அனைவரையும் தோ்ச்சிபெற வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.