FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிக்கும் இன்று நிறைவேற்றப்படுவது குறித்து...

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:37 am IST
தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்பது தொடா்பான அரசு தீா்மானம் தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்படவுள்ளது. இந்தத் தனித் தீா்மானத்தை பேரவையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் முன்மொழிகிறாா்.

மனோன்மணீயம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட ‘மனோன்மணீயம்’ எனும் நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, 1970 நவ.23-ஆம் தேதி முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

2021 டிச.12-ஆம் தேதி முதல் மாநிலப் பாடலாக அதிகாரபூா்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு, தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் பாடப்பட வேண்டும் என பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments