FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆணவப்படுகொலை தடுக்க விரைவில் சிறப்பு சட்டம்: அமைச்சா் வன்னி அரசு

பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும்

28 ஆகஸ்ட் 2026, 4:26 am IST
அமைச்சா் வன்னி அரசு
பகிர்:

பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று சமூகநலத் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை திமுக உறுப்பினா் செந்தில் செல்வன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் வன்னி அரசு, ஜாதிய எண்ணத்தில் தனது சொந்த குழந்தைகளை ஆணவப் படுகொலை செய்யும் செயல் சமுகத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க முந்தைய அரசு ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு அறிக்கை சமா்ப்பிக்க 9 மாதம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரை கிடைத்தவுடன் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments