FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நேபாளத்திலிருந்து பத்திரமாக தில்லி வந்து சேர்ந்த 21 தமிழர்கள்!

நேபாளத்திலிருந்து 21 தமிழர்கள் பத்திரமாக தில்லி வந்து சேர்ந்துள்ளனர்.

நேபாள வெள்ளம் - ENS
பகிர்:

கும்பகோணத்திலிருந்து நேபாளம் சென்ற ஆன்மிகக் குழுவில் வெள்ளத்தில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட 21 பேரும் பத்திரமாக புது தில்லி வந்து சேர்ந்தனர்.

தில்லி விமான நிலையம் வந்திறங்கிய தமிழர்களை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

தமிழகத்திலிருந்து சென்ற அமைச்சர்கள் குழுவினர் 21 பேரையும் சந்தித்து சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். புது தில்லியிலிருந்து இன்று இரவு 8 மணிக்கு தில்லி விமான நிலையத்திலிருந்து சென்னை புறப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

இவர்கள் இன்று காலை நேபாளத்திலிருந்து விமானம் மூலம் புது தில்லி வந்து அங்கு பத்திரமாக தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 8 மணிக்குப் புறப்பட்டு சென்னை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள 100 -க்கும் மேற்பட்ட தமிழர்களில் 21 பேர் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், இவர்கள் அனைவரும் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.

திபெத் எல்லையையொட்டி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தேசமங்கையர்கரசி தவிர்த்து, தமிழகத்தில் இருந்து இரு குழுக்கள் நேபாளம் சென்றனர். கும்பகோணத்தில் ஏஜென்சி மூலமாக என்ற 54 பேர் சென்ற குழுவில் 21 பேர் பாதுகாப்பாக உள்ளனர். மற்றவர்களைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. மேலும் சென்னை குரோம்பேட்டையில் இருந்து சென்ற மற்றொரு 49 பேர் கொண்ட குழுவினரின் தகவல்களும் கிடைக்கவில்லை.

தமிழர்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு நேபாளம் சென்றிருந்த நிலையில் அமைச்சர்கள் குழு தில்லி சென்றிருந்தது.

இதனிடையே நேபாளத்திலிருந்து இந்தியா திரும்பியவர்களின் விவரங்களும் வெளியாகியுள்ளது.

1. சிவரஞ்சனி முத்துநாதன்

2. கற்பகம் ராஜமோகன்

3. மாறன் கோவிந்தசாமி

4. சாந்தி மாறன்

5. முத்துக்குமரேசன் ராமலிங்கம்

6. நவு கபீர்தாஸ்

7. விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன்

8. மைதிலி முத்துக்குமரேசன்

9. தியாகராஜன் ரத்தினம்

10. கிருபாகரி பாலசுப்ரமணியம்

11. வள்ளிநாயகி சிவகுமார்

12. சத்ய ஜெயராமன்

13. திருமாவளவன் கோவிந்தராசு

14. கனகசபை நடேசபிள்ளை

15. ராதை கனகசபை

16. ரத்தினகுமார் குஞ்சிதபாதம்

17.பூங்குழலி பொன்னம்பலம்

18. பழனியப்பன் மாணிக்கப்பெருமாள்

19. கலைமதி பழனியப்பன்

20. ரகுநாதன் முனிராஜ்

21. கனகசபை நடேச பிள்ளை.

மேலும் இந்தியர்கள் 288 பேரைக் காணவில்லை என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments