நேபாளத்தில் 103 தமிழர்கள் சிக்கித் தவிப்பு! பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் தகவல்!
நேபாளத்தில் 103 தமிழர்கள் சிக்கியிருப்பதாக பேரவையில் தெரிவித்திருப்பது பற்றி...
நேபாளத்தில் மொத்தம் 103 தமிழர்கள் சிக்கியிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேபாள பெருவெள்ளம் தொடர்பாகவும், கைலாஷ யாத்திரை சென்ற தமிழர்களின் நிலை குறித்தும் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்து பேசினார்.
அவர் பேசியதாவது:
Advertisement
Advertisement
”நேபாள ஆற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 384 பயணிகள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களில் 291 பேர் வெளிநாட்டவர். 93 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். 75 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நிறுவனம் மூலம் கடலூரிலிருந்து 11 பேர், கிருஷ்ணகிரி 5, தஞ்சாவூர் 16, திருச்சி 4, திருவாரூர் 2, மயிலாடுதுறை 7, சென்னை 6, தர்மபுரி, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 10 மாவட்டங்களில் இருந்து 54 தமிழர்கள், புதுவையைச் சேர்ந்த 3 பேர் கைலாஷ யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் நேபாள நாட்டின் லாண்ட்ரூக்கிலிருந்து ரஷ்வாகதிக்கு மூன்று வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நடுவில் சென்ற வாகனம் சிக்கியுள்ளது. அப்போது உடமைகளை விட்டுவிட்டு 20 பேர் வெளியேறி பத்திரமாக இருப்பதை உறுதி செய்துள்ளோம்.
மீதமுள்ள 34 பேர் குறித்த தகவலை அறியும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்பில் இருக்கிறோம்.
மேலும், சென்னையிலிருந்து ஒரு நிறுவனம் 49 தமிழர்களை கைலாஷ யாத்திரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும், அவர்களின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ளவும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
103 tn peoples stranded in Nepal - Minister Rajmohan informs the Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.