பள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடையுடன் விளையாட்டுச் சீருடை (ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி) வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு...
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடையுடன் விளையாட்டுச் சீருடை (ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி) வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஆக. 24) தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027ல் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
''TN-ARIVU 2027-28 ஆம் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.
Advertisement
Advertisement
இப்புதிய பாடத்திட்டம், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை அறிவு ஃபவுண்டேஷன் (Arivu Foundation) 6 முதல் 8ஆம் வகுப்பு வரை அறிவு டிஸ்கவரி (Arivu Discovery),
9 முதல் 12ஆம் வகுப்பு வரை அறிவு எட்ஜ் (Arivu Edge) என்ற வளர்ச்சிக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு தொடக்கநிலையில் வலுவான அடித்தளத்தையும், நடுநிலையில் ஆழமான புரிதலையும், எதிர்காலத் திறன்களையும் மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்படும்.
மாணவர்களின் நாளைய தொழில்நுட்ப முன்னோடிகளாக மாற்றம் செய்யும் வகையில் செயற்கை நுண்ணறிவு, எந்திரனியல், புதுமை மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று நிலைகள் ரூ. 2.72 கோடியில் விரிவாக்கப்படும்.
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கற்றலை வலுப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தமிழ்நாடு தன்நிலைக் கற்றல் திட்டம், முதற்கட்டமாக 500 நடுநிலைப் பள்ளிகளில் 6 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ. 70 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.
சென்னையில் உள்ள 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கழிவுச் கசடிலிருந்து உருவாகும் உயிரி வாயுவை தரம் உயர்த்தி வணிகமயமாக்கப்படும்.
ரூ. 102 கோடியில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பாதாள சாக்கடை பராமரிப்பு முழுமையாக இயந்திரமயம் ஆக்கப்படும்.
மாணவர்களின் படைப்பாற்றல், தலைமைத்துவம், தனித்திறமைகள் மற்றும் கற்றல் ஆர்வம் மலர, புத்தம் இல்லா கல்வியாக, 'மகிழ்வுடன் முன்னேறு' திட்டம் 6279 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 1.89 கோடியில் அறிமுகப்படுத்தப்படும்.
வாசிப்பை நேசித்து அறிவை சுவாசிக்க அரசு மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு நாளிதழ்களும் பொது நூலகங்களில் இருந்து நூல்களும் தொடர்ந்து வழங்க வாசிப்பை நேசிப்போம் திட்டம் ரூ. 1.45 கோடியில் செயல்படுத்தப்படும்.
நடுநிலைப் பள்ளிகளுக்கு 150 சிறார் நூல்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நூல்கள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஒரு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் வழங்கப்படும்.
3205 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 4.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். வழங்க தமிழ்ப் பேச்சு உயிர் மூச்சு என்ற பெயரில் தமிழ்சார் பயிற்சி வழங்கப்படும்'' என அமைச்சர் குறிப்பிட்டார்.
Sports jerseys will now be provided along with school uniforms: Minister Rajmohan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.