FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அடிக்க கை ஓங்குகிறார், பாய்ந்து வருகிறார்: கொந்தளித்த அமைச்சர் ராஜ்மோகன்

சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் அவேசமாக பேசியது குறித்து...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 4:55 pm IST
அமைச்சர் ராஜ்மோகன் - படம்: சட்டப்பேரவை
பகிர்:

திமுக உறுப்பினர் அடிக்க கை ஓங்குகிறார், பாய்ந்து வருகிறார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் அவேசமாக பேசினார்.

சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் காலை 9.30 மணிக்கு அவை கூடியது.

நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், பேரவையில் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

அப்போது, காவிரி விவகாரம் தொடர்பாக, அவையில் விவாதம் நடைபெற்று வந்தது. அப்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், ”காவிரி விவகாரத்தில் திமுக எந்த அளவுக்கு துரோகம் இழைத்தது என்று பேச ஆரம்பித்தால், நிறைய விஷயங்கள் பேசலாம்” என்றார்.

இதையெடுத்து, திமுக உறுப்பினர் கே.என். நேரு, துரோகம் என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவி சங்கர், துரோகம் என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

இதையடுத்து, பேசிய சட்டத் துறை அமைச்சர், ”சட்டப்பேரவையில் திமுகவினர் முன்வரிசைக்கு வருவதையும் நேரலையில் காண்பிக்க வேண்டும். இதனை, மக்கள்தான் விரும்புகிறார்கள்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ”என்ன வார்த்தை இது; பைத்தியம் மாதிரி பேசுகிறார்கள் என்று கூறுகிறார்; இதைத்தான் சட்ட அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஒருமையில் பேசுவது, வாடா போடா என்று பேசுவது, மரபுக்கு மாறான வார்த்தைகளை பேசுவது, இதையெல்லாம் அவர்கள் தவிர்க்க வேண்டும்.

தவெகவினரை கட்டுப்படுத்துவதற்கு முதல்வர் விஜய்யின் கடைக்கண் பார்வை ஒன்று போதும்; திமுக உறுப்பினர் அடிக்கிறதுக்கு பாய்ந்து வருகிறார்; கையை ஓங்கி வருகிறார் ” என்றார்.

சட்டப்பேரவையில், திமுக உறுப்பினர் பேச்சை சுட்டிக்காட்டி, அமைச்சர் ராஜ்மோகன் அவேசமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Minister Rajmohan spoke heatedly in the Legislative Assembly, stating that a DMK member was raising his hand to strike and lunging forward.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments