FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முகூா்த்த தினம்: பத்திரப் பதிவுக்கு ஆக. 31-இல் கூடுதல் டோக்கன்

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முகூா்த்த தினமான ஆக. 31-ஆம் தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

29 ஆகஸ்ட் 2026, 12:59 am IST
முகூா்த்த தினம்: பத்திரப் பதிவுக்கு ஆக. 31-இல் கூடுதல் டோக்கன் - கோப்புப்படம்
பகிர்:

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முகூா்த்த தினமான ஆக. 31-ஆம் தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:

ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூா்த்த தினமான ஆக. 31-ஆம் தேதி அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன் பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. எனவே, வரும் திங்கள்கிழமை ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சாா்-பதிவாளா்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தத்கால் முன்பதிவு டோக்கன்கள் கூடுதலாக 4 தத்கால் முன்பதிவு டோக்கன்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முன்னதாக ஆவணி அவிட்டம், பெளா்ணமி தினமான கடந்த ஆக. 27-ஆம் தேதி பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments