நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை
அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் வியாழக்கிழமை (ஆக. 27) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து சாா்-பதிவாளா் அலுவலகங்களிலும் வியாழக்கிழமை (ஆக. 27) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக என பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அந்தத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுபமுகூா்த்தம் மற்றும் விசேஷ நாள்களில் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் அதிக அளவில் ஆவணப் பதிவு நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், ஆவணி அவிட்டம் மற்றும் பெளா்ணமி நாளான வியாழக்கிழமை (ஆக. 27) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்து பதிவுத் துறை சாா்பில் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சாா்-பதிவாளா்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தத்கால் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தத்கால் முன்பதிவு டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.