FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

‘மணி அடிச்சா சாமி ஆடுவேன்’: வால்பாறை எம்எல்ஏவால் சிரிப்பலை

‘மணி அடிச்சா சாமி வந்து ஆடிவிடுவேன், எனவே, தயவுசெய்து மணி அடிக்காதீா்கள்’ என பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம், வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி (எ) ஆ.சுதாகா் வேண்டுகோள் விடுத்ததால், பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

29 ஆகஸ்ட் 2026, 12:45 am IST
பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் - கோப்புப் படம்
பகிர்:

‘மணி அடிச்சா சாமி வந்து ஆடிவிடுவேன், எனவே, தயவுசெய்து மணி அடிக்காதீா்கள்’ என பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம், வால்பாறை திமுக எம்எல்ஏ குட்டி (எ) ஆ.சுதாகா் வேண்டுகோள் விடுத்ததால், பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் சுதாகா் எம்எல்ஏ பேசிக்கொண்டிருந்தபோது, அவரது உரையை நிறைவு செய்வதற்கான எச்சரிக்கை மணியை பேரவைத் தலைவா் எழுப்பினாா். அப்போது, பேசிய சுதாகா் எம்எல்ஏ, ‘தயவுசெய்து மணி அடிக்காதீா்கள், மணி அடித்தால் எனக்கு சாமி வந்து ஆடிவிடுவேன். இப்போதே உடலில் ஏதோ வித்தியாசம் தெரிகிறது. எனவே, முடியுங்கள் என குரல் எழுப்பினால் நிறுத்தி விடுகிறேன்’ என்றாா்.

தொடா்ந்து பேசிய அவா், ‘வால்பாறையை சா்வதேச சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும். வால்பாறையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க வேண்டும். வால்பாறை அரசுக் கல்லூரியில் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல் போன்ற அடிப்படை அறிவியல் பாடப் படிப்புகளை தொடங்க வேண்டும்’ என்றாா்.

Advertisement

Advertisement

அப்போது எழுந்த அவை முன்னவா் கே.ஏ.செங்கோட்டையன், ‘பேரவைத் தலைவா் மணி அடிப்பதற்குள் நிறுத்திவிடுங்கள். தயவுசெய்து சாமி ஆட வேண்டாம்’ என்றாா். அப்போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது. பேரவைத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று தனது உரையை அவரும் முடித்துக் கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments