படம் ஓடாது என அரசு நினைக்கிறது; மக்கள் முதலில் கிளைமேக்ஸை பார்க்கட்டும்! பேரவையில் கலகலப்பு
மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குவதற்கு முன் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பது குறித்த விவாதத்தில்..
தமிழக சட்டப்பேரவையில் இனி மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குவதற்கு முன் அமைச்சர்கள் முன்னுரை வாசிக்கும் போதே புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என அவைத் தலைவர் கூறியது குறித்து கலகலப்பான விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் பேசுகையில், அரசு எடுத்திருக்கும் முத்தாய்ப்பான திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில்தான் இந்த அறிவிப்புகள் இருக்கின்றன.
இனி மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குவதற்கு முன் அமைச்சர்கள் முன்னுரை வாசிக்கும் போதே புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும், எனவே, மானியக் கோரிக்கை மீதான பதிலுரை கடைசியில் இருக்கும் என்று அவைத் தலைவர் அறிவித்தார்.
Advertisement
Advertisement
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மற்றும் பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசினர்.
தங்கம் தென்னரசு பேசும்போது, ஒரு திரைப்படமே இருக்கிறது, படம் 2 மணி நேரம் பார்க்கத்தானே போகிறர்கள் என்றும், அதனால், கிளைமாக்ஸை போட்டுவிடுவோம் பிறகு படத்தைப் பாருங்கள் என்று சொன்னால் சரியாக வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அவைத் தலைவர், கிளைமாக்ஸை மக்கள் பார்க்காமலே சென்று விடுவார்களோ என்ற கவலையில் சொன்னேன் என நகைச்சுவையாக பதிலளித்தார்.
உங்களுடைய கிளைமாக்ஸை யாரும் பார்க்காமல் போக மாட்டார்கள் என தங்கம் தென்னரசு பேசினார்.
பிறகு, பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இன்று காலை வந்ததில் இருந்தே, இதுபோன்றுதான் கூறி வருகிறீர்கள்.
தியேட்டருக்கு போனதும் படத்தின் கிளைமாக்ஸை போட்டுவிடுவது போல என்று தங்கம் தென்னரசு சொல்கிறார். மக்கள் கிளைமாக்ஸ் தெரியாமல் போய்விடுவார்களோ என்று நீங்கள் சொல்கிறீர்கள். படம் நன்றாக இருந்தால் பொறுமையாக இருந்து கிளைமாக்ஸை பார்த்துவிட்டுத்தான் செல்வார்கள்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த படம் ஓடாது, நன்றாகவே இருக்காது என்று தெரிந்துவிட்டதால் முதலிலேயே கிளைமாக்ஸை போட்டுவிடுவோம் என்று சொல்வது போல இருப்பதாகக் கூறினார். இந்த விவாதத்தால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.
பிறகு அவைத்தலைவர் கூறகையில், நான்கைந்து மானியக் கோரிக்கைகள் குறித்த செய்திகளைப் பார்க்கும்போது முக்கிய அறிவிப்புகள் விடுபட்டிருந்தது. எனவே, தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும்,
மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பே அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டால் விவாதம் நடத்த வாய்ப்பு கிடைக்கும். இறுதியாக அறிவிப்புகளை வெளியிடுவதால் உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நான் கருதுவதால் இந்த நடைமுறை தொடரும் என்று அறிவித்தார்.
Government thinks the movie won't run; let the people see the climax first! — Lively scenes in the Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.