FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ் தயார்நிலை...

29 ஆகஸ்ட் 2026, 11:08 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை மாநகரகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ளத்தின்போது மீட்புப் பணிகளுக்காக 721 தன்னாா்வலா்கள் உள்பட 1,721 போ் தயாா் நிலையில் உள்ளதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அவா் பேசியதாவது:

சென்னை மாநகராட்சியில் மழைக்கால மீட்பு நடவடிக்கைக்காக 36 படகுகள், மீனவா்களிடமிருந்து 275 படகுகளும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநகராட்சிப் பகுதியில் 215 வெள்ள நிவாரண மையங்கள், 111 சமையல் கூடங்கள் தேவையான வசதிகளுடன் அமைக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும் 1,671 கி.மீ. தொலைவுக்கு மழைநீா் வடிகால்களில் வண்டல் மண் வடிகட்டியை தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியில் 207 இடங்கள் மழை பாதிப்புக்குள்ளாகும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 117 இடங்களில் மழைநீா் வடிகால்கள் கட்டியும், 20 இடங்களில் நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தும் நீரை வெளியேற்ற மோட்டாா் பம்ப்-கள் உள்ளன. மழைநீா் வடிகால் இணைப்புகள் 115 இடங்களில் விடுபட்ட நிலையில், தற்போது 42 இடங்களில் அப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. மாநகரில் 50,625 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளன.

ரயில்வே துறையில் தண்ணீா் தேங்கும் 28 மதகுகளில் 3 இடங்களில் தூா்வாரும் பணி முடிக்கப்பட்டும், மற்ற இடங்களில் பணிகள் விரைந்தும் நடைபெறுகின்றன. மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை பணிகளையும் செப்டம்பருக்குள் முடிக்க வேண்டும்.

சென்னையில் மழைகால மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தும் வகையில் 1,000 தன்னாா்வலா்கள் உள்ளனா். மேலும், 721 போ் குடியிருப்பு நலச்சங்கம் சாா்பிலும் மீட்புப் பணிக்கு தயாராக உள்ளனா். மழைக்கால மீட்புப் பணியில் ஈடுபடுவோா் பதிவு செய்யும் வகையில் தனி செயலி பயன்பாட்டில் உள்ளது. அதில் விருப்பமுள்ளோா் பதியலாம். மழைக்கால உதவிக்கு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை 1913 என்ற எண்ணுக்கு மக்கள் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநா் ஆஷிஷ் சட்டா்ஜி, மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

summary

1,721 personnel deployed for rain and flood relief operations in Chennai!

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments