FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சட்டென மாறிய வானிலை! சென்னையில் மழை!

சட்டென மாறிய வானிலையால் சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

மழை நிலவரம் - file photo
பகிர்:

சென்னையில் காலை முதலே சூரியன் தலைக்காட்ட விரும்பாமல் சற்று ஒதுங்கியே காணப்பட்ட நிலையில், பிற்பகல் 3 மணிக்கு ஆங்காங்கே மழை தலைக்காட்டத் தொடங்கியிருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களாக மாலையில் அல்லது இரவில் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை சற்று முன்னதாகவே மழை தன்னுடைய கடைமையச் செய்யத் தொடங்கிவிட்டது.

சென்னையில் அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் 3 மணிக்கு திடிரென கருமேகங்கள் சூழ்ந்து மழையைப் பொழிந்தன. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது மறைவான இடங்களில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

சென்னையில் தி.நகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

ஆவடி, திருமுல்லைவாயல், அயப்பாக்கம், உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பதிவாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

நாளையும், சென்னை மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில வாரங்களாக ஆங்காங்கே மழை பெய்வதும், அருகில் உள்ள பகுதிகள் மழை பெய்வது போலவே இருந்துவிட்டு மழையே பெய்யாமல் போவதுமாக இருந்து வருகிறது. அதுபோலவே இன்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து பூமியை குளிரவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments