சென்னை, புறநகர்ப் பகுதிகளில் இன்று இரவில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு குறித்து...
சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் இன்று(செப். 21) மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும், தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:
”மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுபெற்றது.
Advertisement
Advertisement
தற்போது வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், ஜவ்வாதுமலை, பர்வதமலை சுற்றுவட்டாரங்கள், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் சுற்றுவட்டாரங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது.
இன்று மாலை/இரவு ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழையை எதிர்ப்பார்க்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Private weather analyst Hemachandran has stated that there is a possibility of rain in Chennai and its suburban districts this evening or at night (September 21).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.