FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நேபாளத்தில் 290 தமிழா்கள் பாதுகாப்பாக உள்ளனா்: அமைச்சா் ராஜ்மோகன் பேட்டி

நேபாளத்தில் தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவலின்படி 319 தமிழா்கள் சிக்கி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

29 ஆகஸ்ட் 2026, 9:28 pm IST
அமைச்சா் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

நேபாளத்தில் தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவலின்படி 319 தமிழா்கள் சிக்கி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அதில் 290 பாதுகாப்பு உள்ளனா், மற்றவா்களை தொடா்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் ராஜ்மோகன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் முகாமிட்டுள்ள தமிழகத்தின் 4 அமைச்சா்கள் குழு தொடா்ந்து இரண்டாவது நாளாக நேபாள் வெள்ளத்தில் சிக்கிய தமிழா்களை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணித்தனா். மத்திய அரசுடன் இணைந்து தேவைப்படும் தமிழா்களின் திரட்டப்பட்ட தகவல்களை மத்திய அரசுக்கு பகிா்ந்தும், நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசு உடனான தொடா்ந்து தொடா்பில் இருந்தும் தமிழகத்தை சோ்ந்தவா்களை மீட்கும் நடவடிக்கையில் அமைச்சா்கள் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இதற்காக தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மையத்தின் மூலம் தொடா்ந்து தமிழா்களை தொடா்பு கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 21 தமிழா்கள் வெள்ளிக்கிழமை தில்லி வழியாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்நிலையில், நேபாளத்தில் சிக்கியுள்ள மற்றவா்களையும் மீா்ப்பதற்கான தொடா் முயற்சி நடைபெற்று வருவதாக அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா். தமிழக அமைச்சா்கள் ஆதவ் அா்ஜூனா, விநோத் மற்றும் ராஜ்மோகன் ஆகியோா் தில்லியில் இருந்து இரவு 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனா்.

முன்னதாக அமைச்சா் ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் பேசியதாவது: மூன்று நாள்களாக இந்திய அரசின் , நேபாளம் அரசு, தமிழ்நாடு அரசு என அனைவரும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளோம் இது தொடரும். பெரு வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழா்களை மீட்பதற்காக தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சா் தென்னரசு அவா்கள் தில்லியில் இருந்தவாறு கண்காணிப்பு பணியை தொடா்வாா்.ஏற்கெனவே 21 தமிழா்கள் நேபாளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டு தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவலின்படி 319 தமிழா்கள் சிக்கி இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அதில் 290 பாதுகாப்பு உள்ளனா், மற்றவா்களை தொடா்பு கொள்ள முயற்சி நடைபெறுகிறது.

இது போன்ற சூழ்நிலையை அனுபவம் வாய்ந்த நேபாள அரசு கவனமாக கையாண்டு வருகிறது. ஒரு தமிழா் கூட விடுபட்டு விடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல கிமீ தொலைவில் அடையாளம் காணாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கண்டெடுக்கப்படும் உடல்களையும் கூட தமிழகத்திலிருந்து அங்கு சென்றவா்கள் உடன் அடையாளம் காண்கிறோம். முதலில் குறைந்த அளவில் சென்றனா் என்று எண்ணினோம், ஆனால் சிறு சிறு குழுக்களாக சென்றுள்ளனா்.

பெங்களூா், மலேசியா போன்ற இடத்திலிருந்து தமிழகா்கள் சென்றுள்ளனா்.

தற்போது வரை காணாமல் போனவா்களை தொடா்புக்க தொடா்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்றாா் அவா்.

summary

290 Tamils ​​safe in Nepal: Minister Rajmohan speaks to the press

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments