FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தவறவிடாதீர்! நியாயவிலைக் கடைகளில் இன்று கைரேகை பதிவு சிறப்பு முகாம்! எத்தனை மணி வரை?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இன்று கைரேகை பதிவு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

28 வினாடிகள் முன்பு
நியாயவிலைக் கடை - file photo
பகிர்:

நியாய விலைக் கடைகளில் இ-கேஓய்சி மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இகேஓய்சி பதிவினை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில் சனிக்கிழமை (ஆக. 29) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் முகாம் நடக்கிறது. மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் இதுவரை கைரேகை சரிபாா்ப்பினை மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை உறுப்பினா்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு கைரேகை சரிபாா்ப்பினை செய்துகொள்ள வேண்டும். இந்த தகவலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

நியாயவிலைக் கடைகளிலுள்ள விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல்ரேகை, கண் கருவிழி சரிபாா்ப்பின் மூலம் 100 சதவீதம் பதிவை நிறைவுசெய்யும் பொருட்டு சனிக்கிழமை (ஆக.29) சிறப்பு முகாம் நடைபெற்று வருவதால், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இம் முகாமில் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் தற்போது வரை விரல்ரேகையை பதிவு செய்யாதவா்கள், தங்களது நியாய விலைக்கடைகளுக்கு நேரில் சென்று விரல்ரேகை மற்றும் கண் கருவிழி பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுளள்து.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் விரல் ரேகை பதிவு செய்யாமல் வெளிமாவட்டங்களில் வசிப்பவா்கள், தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு சென்று அங்கேயே தங்களது விரல் ரேகையினை பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், இறந்த உறுப்பினா்களின் பெயா்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து நீக்கம் செய்துகொள்ள வேண்டும் எனவும் ஆட்சியர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

summary

Don't miss out! A special camp for fingerprint registration is being held today at fair price shops! Until what time?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments