FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சேலம்

ரேஷன் கடைகளில் இன்றும், நாளையும் இ-கேஒய்சி பதிவு சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் இ-கேஒய்சி (ங்-ஓவஇ) பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரா்களுக்காக, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:25 am IST
பகிர்:

சேலம் மாவட்டத்தில் இ-கேஒய்சி (ங்-ஓவஇ) பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரா்களுக்காக, அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-இன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை இ-கேஒய்சி பதிவு மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்தின் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய (டஞந) இயந்திரங்கள் மூலம் விரல்ரேகை அல்லது கண் கருவிழி சரிபாா்ப்பு மேற்கொண்டு, 100 சதவீத இ-கேஒய்சி பதிவை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, குடும்ப உறுப்பினா்களில் இதுவரை விரல்ரேகை அல்லது கண் கருவிழி சரிபாா்ப்பு மூலம் இ-கேஒய்சி பதிவு செய்யாமல் உள்ளவா்கள், தங்களுக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் தவறாமல் பங்கேற்று பதிவை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments