மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி
மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியானது தொடர்பாக...
மதுராந்தகம்: புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பிய தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 4 பேர் பலியாகினர்.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர் புதுச்சேரிக்கு ஒர் காரில் சுற்றுலா சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கார் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டுடிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமா காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்து கல்லூரி மாணவர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.
Advertisement
Advertisement
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு மற்றும் மதுராந்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்லூரி மாணவர்கள் சென்ற கார் டயர் வெடித்து 3 பேர் பலியான சம்பவம் அவர்களது நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Four college students killed after car tyre bursts near Maduranthakam
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.