FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோவையில் வட மாநிலத்தோர் வாழும் பகுதியில் அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள்!

கோவையில் வட மாநிலத்தோர் வாழும் பகுதியில் அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள்

44 வினாடிகள் முன்பு
பகிர்:

கோவை நவ இந்தியா என்ற இடத்தில் வட மாநிலத்தவர்கள் தகர கொட்டகை அமைத்து தங்கியிருந்த பகுதியில் தொடர்ந்து 7 சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் தரக கொட்டகையுள்ள பகுதியில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில், சுமார் 40-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைத்து 500-க்கும் மேற்பட்டோர் தங்கி கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தகவல் அறிந்த உடன் பீளமேடு மற்றும் கோவை தெற்கு தீயணைப்புத்துறையினர் நான்கு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் அங்கு இருக்கக்கூடிய தகர கொட்டாய் உடைத்து தீயை அணைத்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் பணிக்குச் சென்ற போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மொத்தம் 7 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாகவும் இதில் யாருக்கும் எந்த விதமான உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். கோவையில் ஒரே நேரத்தில் 7 சிலிண்டர்கள் வெடித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments