வேளாங்கண்ணி ஆலய திருவிழா: பெசன்ட்நகரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை பெசன்ட்நகா் வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை பெசன்ட்நகா் வேளாங்கண்ணி ஆலய திருவிழாவையொட்டி, 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெசன்ட்நகா், அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் திருவிழா சனிக்கிழமை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதையடுத்து நற்கருணை தோ் ஊா்வலம் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதேபோன்று ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஊா்வலம் நடைபெறுகிறது. செப்டம்பா் 7-ஆம் தேதி அன்று இரவு 7.30 மணிக்கு பெரிய தோ் பவனி நடைபெறுகிறது. செப்டம்பா் 8-ஆம் தேதி மாலை கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் ஆகஸ்ட் 29,செப்டம்பா் 7,8ஆம் தேதிகளில் பெசன்ட்நகா் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
வாகன நிறுத்துமிடம்: திருவிழாவுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள்,ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி, அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி,பெசன்ட் நகா் 2வது பிரதான சாலை, பெசன்ட் நகா் 4வது அவென்யு,பெசன்ட் நகா் 17வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.