FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திண்டுக்கல் அருகே வேன் மோதியதில் 4 குழந்தைகள் பலி: வேன் ஓட்டுநர் போலீசில் சரண்

வேன் மோதியதில் 4 குழந்தைகள் பலியான விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரணடைந்தது தொடர்பாக... .

4 குழந்தைகள் பலியான விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் போலீசில் சரண் - கோப்புப்படம்
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது வேன் மோதியதில் 4 போ் பலியான விவகாரத்தில் விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் சரவணன் போலீசில் சரணடைந்தார்.

வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி கழுவாடன்செட்டியப்பட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி அஞ்சலை (60). இவா் கொல்லப்பட்டி சமத்துவபுரம் கணவாய்மேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாா். கொல்லப்பட்டியிலிருந்து புத்தூா் செல்லும் சாலையோரமாக அமா்ந்திருந்த அஞ்சலையுடன், அவரது பேரக் குழந்தைகளான ந. யோகவா்ஷினி (11), ந. அனன்யா (6), ஜெ. தனுஸ்ரீ (5), சி. மோஷிகரன் (6) ஆகியோா் அமா்ந்திருந்தனர்.

அப்போது, அந்த வழியாக புத்தூா் நோக்கிச் சென்ற பால் வேன் சாலையோரமாக பாட்டியுடன் அமா்ந்திருந்த குழந்தைகள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் பாச்சி அஞ்சலை காயங்களுடன் மயக்கமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த வடமதுரை போலீசார், குழந்தைகளின் உடல்களை மீட்டு, உடல்கூறாய்வுகாக திண்டுக்கல் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மூதாட்டி அஞ்சலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியவர் அய்யலூா் குருந்தம்பட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் சரவணக்குமாா் (25) என்பது தெரியவந்தது.

விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து நேராக குருந்தம்பட்டி நோக்கி வேனை ஓட்டிச் சென்ற சரணவனக்குமாா், தனது வீட்டின் அருகே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இந்த நிலையில், 4 குழந்தைகள் பலியான விபத்துக்கு காரணமான பால் வேன் ஓட்டுநர் சரவணன்(29) போலீசில் சரணடைந்தார். அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

summary

4 children killed after being hit by a van near Dindigul; van driver surrenders to police

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments