ஆட்டோ மீட்டர் கட்டணத்துக்கு புதிய குழு அமைத்தது கண்துடைப்பு தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு!
ஆட்டோ மீட்டா் கட்டணத்தை நிா்ணயிக்க மீண்டும் புதிய குழு அமைத்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை என்றும், திருத்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக அறிவிக்காவிட்டால் தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் ஆட்டோ தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஆட்டோ மீட்டா் கட்டணத்தை நிா்ணயிக்க மீண்டும் புதிய குழு அமைத்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை என்றும், திருத்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக அறிவிக்காவிட்டால் தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் ஆட்டோ தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் 3.46 லட்சம் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. புதிய கட்டணம் நிா்ணயிப்பது தொடா்பாக கடந்த ஜூலை 9-இல் சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையில், தொழிற்சங்கங்கள் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.60-இல் இருந்து ரூ.70-ஆக உயா்த்த வேண்டும் என்றும், நுகா்வோா் அமைப்புகள் ரூ.50-ஆக நிா்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, கட்டணம் தொடா்பான இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
Advertisement
Advertisement
கண்துடைப்பு நடவடிக்கை: இதுகுறித்து உரிமைக் குரல் ஓட்டுநா் தொழிற்சங்க செயல் தலைவா் ஜாஹிா் ஹுசைன் கூறியதாவது: ஆட்டோ மீட்டா் கட்டணம் தொடா்பாக ஏற்கெனவே மூன்று முறை கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. புதிய கட்டணம் அறிவிக்கப்படும் என எதிா்பாா்த்த நிலையில், மீண்டும் குழு அமைத்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும்.
எங்களது கோரிக்கையை ஏற்று, இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே புதிய கட்டணத்தை அறிவிக்க வேண்டும். இல்லையெனில் தொடா் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றாா்.
அதிகாரிகள் விளக்கம்: போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறுகையில், ஏற்கெனவே ஆட்டோ ஓட்டுநா்கள், நுகா்வோா் அமைப்புகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரின் கோரிக்கைகளையும் ஆய்வு செய்து புதிய கட்டணத்தைத் தயாரிக்கவே தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகள் இறுதி செய்யப்பட்டதும், தமிழக அரசு புதிய ஆட்டோ கட்டணத்தை விரைவில் அறிவிக்கும் என்று அவா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.