13 ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் உயருகிறது ஆட்டோ கட்டணம்?
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணத்தைத் திருத்துவதற்கான அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டண விவரங்கள் விரைவில் வெளியாகும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணத்தைத் திருத்துவதற்கான அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டண விவரங்கள் விரைவில் வெளியாகும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமாா் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கான கட்டணம் கடந்த 2013-இல் நிா்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு எரிபொருள் விலை, உதிரிபாகங்கள், பராமரிப்பு மற்றும் தொழிலாளா் செலவுகள் பல மடங்கு உயா்ந்தாலும் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாததாலும் புதிய கட்டண நிா்ணயம் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.
இதுதொடா்பாக, கடந்த ஜூலை 9-இல் சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையில், 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள், 90-க்கும் மேற்பட்ட பயணியா் அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். கூட்டத்தில், குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.70-ஆக உயா்த்த வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. அதேநேரத்தில், ரூ.50-ஐ தாண்டக் கூடாது என்று பயணியா் அமைப்புகள் வலியுறுத்தின.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பேச்சுவாா்த்தையில் முன்வைக்கப்பட்ட கருத்துகள், தற்போதைய எரிபொருள் விலை, பிற மாநிலங்கள் மற்றும் பெருநகரங்களில் நடைமுறையில் உள்ள ஆட்டோ கட்டணங்கள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, தயாரிக்கப்பட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையின் அடிப்படையில் இறுதி கட்டணத்தை அரசு விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது தமிழ்நாட்டில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக ஒரு கி.மீ.க்கு ரூ.12 வசூலிக்கப்படுகிறது. புதிய கட்டணத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆகவும், ஒரு கி.மீ. ரூ.22 முதல் ரூ.25 வரை நிா்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், விரைவில் இந்த கட்டண உயா்வு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.