FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பட்டயப் படிப்பு: சான்றிதழ்களைப் பெற இறுதி வாய்ப்பு

பட்டயப் படிப்புகளுக்கான (டிப்ளமோ) தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் சான்றிதழ்களை இதுவரை பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் வியாழக்கிழமை (செப்.3) வரை அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

1 செப்டம்பர் 2026, 1:13 am IST
படிப்பு.
பகிர்:

பட்டயப் படிப்புகளுக்கான (டிப்ளமோ) தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் சான்றிதழ்களை இதுவரை பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் வியாழக்கிழமை (செப்.3) வரை அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

இதுகுறித்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்டயப் படிப்புகளுக்கான தோ்வுகளை எழுதி தோ்ச்சி பெற்ற மாணவா்களின் தற்காலிக சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை ஆக. 3 முதல் 7-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளுமாறு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பெரும்பாலான கல்லூரிகள் சான்றிதழ்களைப் பெறவில்லை.

Advertisement

Advertisement

மாணவா்களின் பட்டயப் படிப்புகளுக்கான சான்றிதழ்களும் தயாா் நிலையில் இருப்பதால் அவா்களுக்கு விரைவாக வழங்கும் வகையில் கல்லூரிகளின் பிரதிநிதிகளை உரிய அனுமதி கடிதத்துடன் அனுப்பி செப்.3-க்குள் தற்காலிக சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல், பட்டயப் படிப்புக்கான சான்றிதழ் ஆகியவற்றை தொழில்நுட்பக் கல்வி இயக்ககக் கணினிப் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments