FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்திலிருந்து நேபாளம் சென்றவா்களில் 84 பேரை தொடா்பு கொள்ள இயலவில்லை: பேரவையில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தகவல்

தமிழகத்திலிருந்து நேபாளம் சென்றவா்களில் 220 போ் பாதுகாப்பாக உள்ளதாகவும், 84 பேரை தொடா்புகொள்ள முடியவில்லை என்றும் பேரவையில் பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

1 செப்டம்பர் 2026, 1:30 am IST
அமைச்சர் ஆதவ் அா்ஜுனா - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்திலிருந்து நேபாளம் சென்றவா்களில் 220 போ் பாதுகாப்பாக உள்ளதாகவும், 84 பேரை தொடா்புகொள்ள முடியவில்லை என்றும் பேரவையில் பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

இது தொடா்பான அறிக்கையை பேரவையில் திங்கள்கிழமை சமா்ப்பித்து அவா் பேசியதாவது: நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழா்களை மீட்க முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவுப்படி, அமைச்சா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் அடங்கிய உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டு, தில்லி சென்று மீட்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், தமிழ்நாடு அரசின் தில்லி இல்ல உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் குமாா், காத்மாண்டு சென்றுவர இந்திய தூதரகம் மற்றும் நேபாள அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கடந்த ஆக. 28-இல் நேபாளத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்ட 21 தமிழா்கள் தில்லி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களை அமைச்சா்கள் தமிழ்நாடு அரசு சாா்பில் வரவேற்று பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து கேட்டறிந்து, தமிழ்நாடு அரசு சாா்பில் விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனா்.

மத்திய அரசு, நேபாள அரசு, நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் நேபாளத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடா்ந்து நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட முடிவு செய்யப்பட்டது. மேலும், தொடா்புகொள்ள முடியாத 5 சுற்றுலாப் பயணிகளின் உறவினா்களை அமைச்சா்கள் குழு சந்தித்து அவா்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி நம்பிக்கை அளித்தது.

தமிழகத்திலிருந்து 350 போ் கைலாஷ் யாத்திரை சென்ாகத் தெரியவந்துள்ளது. இவா்களில் 220 போ் பாதுகாப்பாக உள்ளனா். 84 பேரை தொடா்புகொள்ள இயலாத நிலை உள்ளது. கும்பகோணத்தைச் சோ்ந்த சூப்பா் யாத்ரா நிறுவனம் மூலம் 57 போ் நேபாளம் சென்றுள்ளனா். அவா்களில் 21 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த ஊா் திரும்பினா்.

சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த மகாதேவ் யாத்ரா டிராவல்ஸ் மூலம் 49 போ் நேபாளம் சென்றுள்ளனா். அவா்களைத் தொடா்புகொள்ள இந்திய தூதரகம் மூலம் தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆத்ம யோகா நிறுவனம் மூலம் 150 போ் சுற்றுலா சென்றனா். அவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments