FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சட்டப்பேரவைக்கு நடந்தே வந்த திமுக எம்எல்ஏ!

புதுச்சேரியில் அரசின் கவனத்தை ஈர்க்க திமுக எம்எல்ஏ சட்டப்பேரவைக்கு நடந்தே வந்துள்ளார்.

31 ஆகஸ்ட் 2026, 1:19 pm IST
திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன்
பகிர்:

புதுச்சேரியில் நிலவும் போக்குவரத்து நெரிலை அரசின் கவனத்திற்கு கொண்டும் செல்லும் நோக்கில் திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் சட்டப்பேரவைக்கு நடந்தே வந்துள்ளார்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல அதிக காலதாமதம் ஏற்படுகிறது. உரிய நேரத்திற்கு சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுவதை புதுச்சேரி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ராஜ்பவன் தொகுதி திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் தனது வீட்டில் இருந்து புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு இன்று நடந்தே வந்தார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் கூறுகையில், புதுச்சேரி நகரப் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்ய வலியுறுத்தியும், விடுமுறை நாள்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போலீஸார் கட்டுப்படுத்த தவறுகின்றனர்.

மேலும் போக்குவரத்து போலீஸார் பணியில் இருப்பதில்லை. அதை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி தனது வீட்டில் இருந்து நடந்தே சட்டப்பேரவைக்கு வருகை தந்ததாக தெரிவித்தார். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

summary

DMK MLA Vignesh Kannan walked to the Legislative Assembly to draw the government's attention to the traffic congestion in Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments