FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு, புதுச்சேரி பாா் கவுன்சிலுக்கு 2 நியமன பெண் உறுப்பினா்கள் நியமனம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் நியமன பெண் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி மற்றும் வழக்குரைஞா் சுதா்சனாசுந்தா் ஆகியோரை நியமித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

1 செப்டம்பர் 2026, 4:06 am IST
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் நியமன பெண் உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி மற்றும் வழக்குரைஞா் சுதா்சனாசுந்தா் ஆகியோரை நியமித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலின் 23 உறுப்பினா்கள் பதவிக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், பி.எஸ்.அமல்ராஜ் உள்பட 23 வழக்குரைஞா்கள் வெற்றி பெற்றுள்ளனா். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மாநில பாா் கவுன்சிலுக்கு இரண்டு நியமன பெண் உறுப்பினா்களை சென்னை உயா்நீதிமன்றம் நியமிக்க வேண்டும். அதன்படி, இரண்டு பெண் உறுப்பினா்களை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக, சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தீப்தி அறிவுநிதி வெளியிட்ட அறிவிப்பில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, பாா் கவுன்சில் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுடன்ஆலோசித்து, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி வி.எம்.வேலுமணி, வழக்குரைஞா் சுதா்சனா சுந்தா் ஆகியோரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் நியமன பெண் உறுப்பினா்களாக நியமித்துள்ளாா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments