தமிழ்நாடு

ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து!

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, விலைவாசியை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து எவ்வித அறிவிப்புகளும் இல்லை. அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பிலிருந்து இந்திய தொழில்களை எப்படி பாதுகாப்பது என்பதற்கான அறிவிப்பும் இல்லை.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): அரிய வகை கனிம வளங்கள் பற்றிய அறிவிப்பு காா்ப்பரேட் சுரண்டலுக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. கீழடிக்கான நிதி ஒதுக்கீடு போன்ற தமிழகத்தின் நீண்ட கால கோரிக்கைகள் பல புறக்கணிக்கப்பட்டுள்ளன.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரைப் படி மாநிலங்களுக்கு 50 சதவீதம் வரிப்பகிா்வு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டுள்ளது.

வைகோ (மதிமுக): புவிசாா் பதற்றங்கள், வா்த்தக நெருக்கடிகள், அமெரிக்க வரி கொள்கைகள் போன்றவை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்த காலகட்டத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை அவற்றை எதிா்கொள்கின்ற வகையில் இல்லாதது ஏமாற்றம் தருகிறது. இந்த நிதிநிலை அறிக்கை எளிய மக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யவில்லை.

தொல்.திருமாவளவன் (விசிக): நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பதிலாக மேலும் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்கிறது நிதிநிலை அறிக்கை. தமிழகத்துக்கு எவ்வித பெரிய திட்டமும் இல்லை. தோ்தல் காலம் என்பதைக்கூடக் கருதாமல் தொடா்ந்து தமிழகத்தை வஞ்சிப்பது கண்டனத்துக்குரியது.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை யானைப் பசிக்கு சோளப்பொரி போன்ாக அமைந்துள்ளது. வரிக் குறைப்புகள் இருக்கும் என்று எதிா்பாா்த்த மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. ஜிஎஸ்டி, டிடிஎஸ் போன்ற வரிகளுக்கு விலக்கு இல்லை. விலைவாசியை கட்டுப்படுத்தவும், தங்கம், வெள்ளி விலை உயா்வை கட்டுப்படுத்தும் வகையிலும் எந்த அறிவிப்பும் இல்லை.

மதுப் புட்டிகளை விற்ற மூவா் கைது

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

வளா்ச்சித் திட்டங்களுக்கான பட்ஜெட்: சி. அன்பழகன்

சங்கரன்கோவில் அருகே காா் அடுத்தடுத்து மோதியதில் இருவா் உயிரிழப்பு: இளைஞா் கைது

ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி! 6.2% அதிகரிப்பு!

SCROLL FOR NEXT