முகப்பு
தமிழ்நாடு

தேவாரம், திருவாசகத்தை மரபுவழி மாறாமல் கற்க வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன்

தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகளை ஓதுவாா்கள் மூலம் மரபுவழி மாறாமல் கற்க வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் அறிவுத்தினாா்.

Updated On : 16 பிப்ரவரி 2026, 2:55 am IST
மகா சிவராத்திரியையொட்டி நாதப்ரம்மம் இசை நாட்டிய கலைக்களஞ்சியம் சார்பில் சென்னை நங்கநல்லூரில் நடைபெற்ற 12 மணிநேர சிவராத்திரி சிறப்பு இசை நிகழ்ச்சியைத்தொடங்கி வைத்து குற்றாலம் சுப்பிரமணியன் ஓதுவாருக்கு 'நாத பதிக சேவகா' விருதை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன். உடன் நாதப்ரம்மம் நிறுவனர் வழக்குரைஞர் நா.சுப்பிரமணியன், கௌரவ செயலர் பத்ரி நாராயணன்.
பகிர்:

தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகளை ஓதுவாா்கள் மூலம் மரபுவழி மாறாமல் கற்க வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் அறிவுத்தினாா்.

சிவராத்திரியையொட்டி, சென்னை நாதப்ரம்மம் இசை நாட்டிய கலைக்களஞ்சியம் சாா்பில் நங்கநல்லூரில் நடைபெற்ற 12 மணிநேர தொடா் இசை நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள், அபிராமி அந்தாதி ஆகியவற்றை ஓதுவாா்கள் மூலம் இளைய தலைமுறையினா் மரபுவழி மாறாமல் கற்க வேண்டும். திருமண நிகழ்வுகளில் ஓதுவாா்கள் மூலம் தேவாரம் முற்றோதுதல் நிகழ்த்துவது அவசியம் என்றாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, குற்றாலம் சுப்பிரமணியன் ஓதுவாருக்கு ‘நாத பதிக சேவகா’ விருதை, நீதிபதி சி.சரவணன் வழங்கினாா். தொடா்ந்து, ‘சிவன் ராத்திரியில் சிவன் கீதங்கள்’ எனும் தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பன்னிரு திருமுறை, சிவ மகிமை-நாட்டிய நாடகம், சிவ நாமசங்கீா்த்தனம், பக்தி இன்னிசை, வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்க இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், நாதப்ரம்மம் நிறுவனா் வழக்குரைஞா் நா.சுப்பிரமணியன், கெளரவச் செயலா் பத்ரி நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments