முகப்பு
தமிழ்நாடு

தமிழக பேரவை முதல் உள்ளாட்சி வரை பங்கு! காங்கிரஸ் நிர்வாகி கோரிக்கை!

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் நிர்வாகியின் மின்னஞ்சல் பற்றி...

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 7:53 AM
முதல்வர் ஸ்டாலின் - ராகுல் காந்தி.
பகிர்:

தமிழக சட்டப்பேரவை முதல் உள்ளாட்சி வரை ஆட்சியில் பங்கு கேட்கக் கோரி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாநில நிர்வாகி ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர்களில் ஒரு தரப்பினர் ஆட்சியில் பங்கு கோரும் நிலையில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ஆட்சியில் பங்கு சாத்தியமற்றது என்று வெளிப்படையாக பதில் அளித்துவிட்டார்.

Advertisement

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சல் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.

அந்த மின்னஞ்சலில், ஆட்சியில் பங்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள், உள்ளாட்சித் தேர்தலில் விதித அடிப்படையில் பங்கு, கூட்டறவு சங்கங்கள் மற்றும் வாரியங்களில் பங்கு உள்ளிட்டவை குறித்து கூட்டணிக் கட்சியுடன் தெளிவான ஒப்பந்தங்களை மேற்கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சிக்கு ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் பங்கு தேவை, மாநிலத்தின் நலன்களை பாதுகாத்து கட்சியின் தலைமை வலுப்படுத்தும் என்று நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மின்னஞ்சலில் உள்ள கோரிக்கைகள் மேலும் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளன.

summary

Role from Tamil Nadu Legislative Assembly to local government! Congress executive demands!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments