திமுக மூத்த தலைவர் எல். கணேசன் காலமானார்
திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எல். கணேசன் இன்று காலமானார்.
திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எல். கணேசன் இன்று காலமானார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த திமுக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான எல். கணேசன் (92) வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை (ஜன. 4) காலமானார்.
இவர் சட்டப்பேரவை, மேலவை, மக்களவை, மாநிலங்களவை என 4 விதமான பொறுப்புகளிலும் பதவி வகித்தவர்.
Advertisement
Advertisement
1980-ல் மாநிலங்களவை எம்.பி.யாகவும், 2004-ல் திருச்சி மக்களவை உறுப்பினராகவும், ஒரத்தநாடு தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்தார்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியுடன் நெருங்கிய நட்புறவில் இருந்த எல். கணேசனை எல்.ஜி. என்றும் அழைப்பர்.
1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்மை வகித்தவர். நாட்டின் அவசரநிலையின்போது, மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறை சென்றார்.
Senior DMK leader, L. Ganesan, passed away at his residence in Thanjavur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.