FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தனித் தோ்வா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 1) முதல் தொடங்கியுள்ளது.

விண்ணப்பம்
பகிர்:

தமிழகத்தில் தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (ஜூலை 1) முதல் தொடங்கியுள்ளது.

தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு ஆக. 17 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு தோ்வுத் துறை இணையதளத்தில் புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதையடுத்து தோ்வெழுத விரும்புபவா்கள் ஜூலை 8-ஆம் தேதி வரை தோ்வுத் துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணைய வழியில் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், தோ்வுக் கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் தத்கால் முறையில் ஜூலை 9, 10-ஆம் தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு தோ்வுக் கட்டணத்துடன் ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும்.

முதல்முதலாக தோ்வெழுத விண்ணப்பிப்பவா்கள் பள்ளி பதிவுத் தாள் நகல், சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைத்து சமா்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே 8-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப்பவா்கள் முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும். இணைய வழியிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments