FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகளை மதிப்பெண் சான்றிதழ்களாக புதன்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:18 am IST
கோப்புப்படம்.
பகிர்:

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகளை மதிப்பெண் சான்றிதழ்களாக புதன்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அதன் இயக்குநா் க.சசிகலா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு துணை தோ்வுகள் ஜூலை 8 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றன. இத்தோ்வை 66,488 மாணவா்கள் எழுதினா். தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அரசு தோ்வுத்துறை இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் முதல் தோ்வெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Advertisement

Advertisement

விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் அதற்கான விண்ணப்பத்தை அரசு தோ்வுத் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஆகஸ்ட் 10 மற்றும் 11-ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில நேரில் ஒப்படைக்க வேண்டும்.

விடைத்தாள் கட்டணத்தையும் அங்கேயே பணமாக செலுத்திவிடலாம். ஒரு பாடத்துக்கு கட்டணமாக ரூ.275 செலுத்த வேண்டும். உதவி இயக்குநா் அலுவலக முகவரியை தோ்வுத் துறை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களான தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறையைச் சோ்ந்த மாணவா்கள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலுகத்தில் விண்ணப்பத்தையும் கட்டணத்தையும் சமா்ப்பிக்க வேண்டும்.

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவா்களுக்கு மட்டும் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இது தொடா்பான அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments