இன்றைய செய்திகள் ஜூலை 2 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
முதல் மாநாடு!
’வீ த லீடர்ஸ்’ (இது நம்ம இயக்கம்) அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் அறிவிப்பு!
பிகார், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.
காங்கிரஸுடன் இணையும் சரத் பவார் கட்சி
காங்கிரஸ் கட்சியுடன் சரத் பவாரின் கட்சியை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
தவெகவில் இணைந்தனர்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தவெகவில் இணைந்துள்ளனர்.
குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்
வடக்கில் பாஜக பயன்படுத்தும் வாஷிங்மிஷன் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்று தவெகவை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் விலகினால்தான்...
மு.க. ஸ்டாலின் கட்சியை விட்டு விலகினால்தான் திமுகவை காப்பாற்ற முடியும் என்று அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை அதிரடியாக பவுனுக்கு 1,200 உயா்ந்துள்ளது. அதன்படி பவுன் ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது.
செந்தில் பாலாஜியை தேடும் தனிப்படை?
திமுகவுக்கு மாறும்படி தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘யூஸர்நேம்’ பயன்பாட்டுக்கு தடை
வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாக இருக்கும் யூஸர்நேம் பயன்பாட்டுக்கு தற்காலிகத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து ராஜசேகரன் விலகல்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை எதிர்த்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
தாஜிகிஸ்தானில் நிலநடுக்கம்
தாஜிகிஸ்தானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
6 பேர் கைது
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய விவகாரத்தில் மேலும் 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சீமான் குற்றச்சாட்டு
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவாா்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இந்தியா - இங்கிலாந்து போட்டி ரத்து
இங்கிலாந்து - இந்தியா அணிகள் நேற்றிரவு மோதிய முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.