மக்கள் சந்திப்பு! சரியான நேரத்துக்கு கரூர் வந்தார் முதல்வர் விஜய்!
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சரியான நேரத்துக்கு கரூர் வந்தார் முதல்வர் விஜய்
கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை முற்பகல் 12 மணிக்கு கரூரில் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு வருகை தந்தார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு இன்று காலை வந்த முதல்வர் விஜய் அங்கிருந்து காரில் கரூருக்கு வந்தார். கரூா் வெண்ணைமலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில், அரங்குக்குள் வந்த முதல்வர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் 5 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இவரைக் காண அரங்குக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில், ‘க்யூஆா் கோடு’ அடையாள அட்டை வைத்திருப்பவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதால், பாஸ் பெறாதவர்கள் அரங்குக்கு வெளியே பல மணி நேரமாகக் காத்திருக்கிறார்கள்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சிக்காக அட்லஸ் கலையரங்க மைதானத்தைச் சுற்றி சுமாா் 10 அடி உயரத்துக்கு தகரக் கொட்டகைகள், தற்காலிக தடுப்பு சுவா்கள் அமைக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.