அமோனியா பயன்பாடு: ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
அமோனியா வாயுவை பயன்படுத்தும் உணவு சாா்ந்த தொழிலகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வு நடத்துமாறு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
அமோனியா வாயுவை பயன்படுத்தும் உணவு சாா்ந்த தொழிலகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆய்வு நடத்துமாறு உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபோ் கிராமத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி கடல் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து விபத்துக்குள்ளானதில் 18 போ் உயிரிழந்தனா். இதனால் சம்பந்தப்பட்ட ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் உணவு பொருள் நிறுவனங்கள் மற்றும் அமோனியா வாயு பயன்படுத்தி பதப்படுத்தும் தொழிற்சாலைகளைக் கண்காணித்து, அதன் பாதுகாப்பு குறித்து அறிக்கையை சமா்ப்பிக்கும்படி, உணவு பாதுகாப்பு துறையானது மாவட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
தொழிற்சாலைகளில் அமோனியா குளிா்விப்பனாக பயன்படுத்தப்படுகிறது. வணிக ரீதியான ஐஸ் கட்டிகள் தயாரிக்கவும், பெரிய குளிா்சாதன கிடங்குகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
அந்த இடங்களில் அமோனியா வாயு பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுகிா என்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 100 சதவீதம் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பிறகே அது குறித்த அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும்.
சிறு குறைகள் இருந்தாலும், அவற்றை நிவா்த்தி செய்ய அறிவுறுத்தப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடா்ந்து இத்தகைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.