என்ன ரகசியம் இருக்கிறது? அமைச்சர் ஆனந்திடம் ஊடகத்தினர் வாக்குவாதம்!
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் என்ன ரகசியம் இருக்கிறது என்று அமைச்சர் ஆனந்திடம் ஊடகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் பிரதமர், குடியரசுத் தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்கூட இதுபோல நடக்காது, ஆனால், கரூரில் முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில், ஊடகத்தினரும், செய்தியாளர்களும் வெளியேற்றப்பட்டது ஏன் என்று அமைச்சர் ஆனந்திடம் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கரூரில் பொதுமக்களை சந்தித்து தமிழக முதல்வர் பேசவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் கூடத்தில் பாஸ் பெற்று செய்தி சேரிக்க அரங்குக்குள் வந்தவர்கள், காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நிகழ்ச்சி நடைபெறும் பெரிய அரங்குக்கு வெளியே, சிறிய கூடத்தில், செய்தியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால், என்ன ரகசியம் இருக்கிறது, ஏன் ஒரு பிரதமர், குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்கூட நடைபெறாத ஒரு நடவடிக்கை இங்கு மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் ஆனந்திடம் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் தவெக தேர்தல் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசுப் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவிருக்கிறது.
Advertisement
Advertisement
கரூரில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சில், 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு, முன்கூட்டியே பாஸ் வழங்கப்பட்டது. பாஸ் பெற்றவர்கள் மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏராளமானோர் அனுமதி கிடைக்காமல், அரங்குக்கு வெளியே வெய்யிலில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொலைவில் இருந்தும்கூட, தமிழக முதல்வர் விஜய்யை பார்த்து விட வேண்டும் என்று பேராவலோடு வெய்யிலை பொருட்படுத்தாமல் கால் வலிக்க நின்றிருக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.