FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 13) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Updated On : 13 ஜூலை 2026, 1:28 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 13) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூலை 13) முதல் ஜூலை 18 வரை, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும். அவ்வப் போது ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது

12 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக மதுரை மாவட்டம் விமான நிலையத்தில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

Advertisement

Advertisement

வேலூா் 105.62, மதுரை மாநகரம் 104.36, திருத்தணி 103.64, சென்னை மீனம்பாக்கம் 102.56, கடலூா் 101.84, பரங்கிப்பேட்டை 101.48, நாகை, திருச்சி தலா 101.3, சென்னை நுங்கம்பாக்கம் 100.76, பாளையங்கோட்டை 100.4, தூத்துக்குடி 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 20 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments