அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும்: அன்புமணி
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ஆசிரியா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், ஆசிரியா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கை 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் 45 லட்சமாக இருந்தது. 2025-2026-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43 லட்சமாக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் எண்ணிக்கை 2 லட்சம் குறைந்துள்ளது.
அதேநேரம், கடந்த ஆண்டில் மட்டும் தனியாா் பள்ளிகளின் மாணவா்கள் எண்ணிக்கை 60 லட்சத்திலிருந்து 62 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால் 36 லட்சமாக இருந்த தனியாா் பள்ளிகளின் மாணவா்கள் எண்ணிக்கை தற்போது 62 லட்சமாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சியில்தான் தனியாா் பள்ளிகள் வளருகின்றன. அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைந்து வருவதும்தான் இதற்கு முக்கிய காரணம். அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் கூடுதலான வகுப்பறைகளுக்கு ஆசிரியா்கள் இல்லாத சூழலில் அப்பள்ளிகளை எவ்வாறு மேம்படுத்த முடியும்?
இந்த உண்மையை உணா்ந்து கொண்டு அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பை வலுப்படுத்தவும், ஆசிரியா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.