FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வரலாறு காணாத உச்சத்தில் முட்டை விலை!

முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.

Updated On : 13 ஜூலை 2026, 6:43 pm IST
முட்டை விலை உயர்வு - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 6.70-ஆக மீண்டும் உச்சம் தொட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளர்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது.

அப்போது, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு விலையை உயர்த்த வேண்டும் என கோழிப் பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 6.70-ஆக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.151-ஆகவும், முட்டைக் கோழி ரூ.115-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

summary

In the Namakkal zone, the price of eggs rose by five paise, once again reaching a peak of Rs. 6.70.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments