எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
எ.வ. வேலுவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது பற்றி...
முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
2022 ஆம் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அவரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இதனிடையே, அவருக்கு எதிராக காவல்துறை பிறப்பித்த லுக்-அவுட் நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த மனுவை விசாரித்து சென்னை உயர் நீதிமன்றம், லுக்-அவுட் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், ஜூலை 15 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக எ.வ.வேலுவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்னிலையில் ஆஜரான தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், அவசர வழக்காக நாளையே விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
இதனை மறுத்த தலைமை நீதிபதி, நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.
இதனிடையே, சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியுள்ள எ.வ. வேலு, நாளை மறுநாள் (ஜூலை 15) விசாரணைக்கு நேரில் ஆஜராவேன் என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay on look-out notice against E.V. Velu - Appeal in the Supreme Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.