FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி

முதல்வர் விஜய் வைத்த விமர்சனத்திற்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்...

Updated On : 12 ஜூலை 2026, 1:40 pm IST
சென்னை விமான நிலையத்தில் எ.வ. வேலு.
பகிர்:

ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்கு கட்டாயம் ஆஜராவேன் என்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்கு சென்ற திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு சென்னை திரும்பினார். தொடர்ந்து விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிங்கப்பூர் மருத்துவமனையில் 2016 ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சை பெற சிங்கப்பூர் செல்வதற்காக கடந்த மாதம் முறைபடி விசா பெற்றேன். ஜூன் 25ஆம் தேதியே நான் சிங்கப்பூர் செல்வதாக இருந்தது. சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் எனது சிங்கப்பூர் பயணத்திற்கான டிக்கெட்டை காண்பித்தேன்.

ஜூன் 25இல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதால் அன்று முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். 30ஆம் தேதியன்று வயிறு தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்றேன். ஜூலை 3ஆம் தேதி இதய மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன். நான் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது. அவற்றை காண்பிக்க தயார். ஜூலை 3ஆம் தேதி ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டது. அதற்கு உரிய மரியாதை கொடுத்து பதில் கடிதம் கொடுத்தேன்.

Advertisement

Advertisement

ஜூலை 3இல் கொடுத்த சம்மனுக்கு 10 நாள்களுக்குப் பிறகு வருவதாக கடிதம் மூலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பதில் அளித்தேன். மீண்டும் 9ஆம் தேதி வரச்சொல்லி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அளித்தது. விசாரணைக்கு ஒத்துழைப்பாக நான் கூறியும் ஓடுகிறேன். ஒளிகிறேன் என கூறுகின்றனர். ஓடுவது, ஒளிவது, பதுங்குவது திமுகவினர் பழக்கம் கிடையாது. ஜூலை 15ஆம் தேதி விசாரணைக்கு கட்டாயம் ஆஜராவேன், எந்த தேதியில் சம்மன் கொடுத்தாலும் ஆஜராவேன்.

சிங்கப்பூருக்கு சென்றபின் பல்வேறு கற்பனைகள் அவிழ்த்துவிடப்பட்டன என்றார்.

summary

Former DMK Minister E.V. Velu has stated that he will definitely appear for questioning on July 15.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments