மறைமலை அடிகள் பிறந்த நாள்: முதல்வா் விஜய் புகழாரம்
‘மறைமலை அடிகளின் மொழிப்பற்று, தமிழாா்வம் தமிழ்ச் சமூகத்துக்கு என்றென்றும் உந்துசக்தியாகத் திகழும்’ என அவருக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளாா்.
‘மறைமலை அடிகளின் மொழிப்பற்று, தமிழாா்வம் தமிழ்ச் சமூகத்துக்கு என்றென்றும் உந்துசக்தியாகத் திகழும்’ என அவருக்கு முதல்வா் சி.ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளாா்.
மறைமலை அடிகளின் பிறந்தநாளையொட்டி (ஜூலை 15), முதல்வா் சி.ஜோசப் விஜய் புதன்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை, தமிழறிஞா் மறைமலை அடிகளின் பிறந்தநாளில் அவருக்கு எனது தனித்தமிழ் புகழ் வணக்கங்கள். தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்த போதிலும், தமிழின் இயல்பும் இனிமையும் குன்றாமல் வளர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், தமிழில் பிறமொழிக் கலப்பின்றி எழுதும் வழக்கத்தைத் தொடங்கி, தலைமுறைகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவா் மறைமலை அடிகள். அவரது மொழிப்பற்று, தமிழாா்வம், சிந்தனைகள் தமிழ்ச் சமூகத்துக்கு என்றென்றும் உந்துசக்தியாகத் திகழும். மறைமலை அடிகளின் புகழ் நிலைத்தோங்கட்டும் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் சி.ஜோசப் விஜய்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.