FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மழை இல்லை... வெய்யில் மட்டுமே! அடுத்த 2 நாள்களுக்கு 19 மாவட்டங்களுக்கு அலர்ட்!

வெய்யில் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை பற்றி.

Updated On : 15 ஜூலை 2026, 3:18 pm IST
வெய்யில் - file photo
பகிர்:

தமிழ்நாட்டில் அடுத்த இரு நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் அவ்வப்பொழுதும் மழை பெய்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை எட்டிப்பார்க்கவில்லை.

வழக்கமாக ஜூன் - ஜூலையில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை இன்னும் தொடங்காமல் அலைகழித்து வருகின்றது. இதனால் வறட்சி அதிகரித்து விவசாயம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த மூன்று நாள்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை எச்சரித்துள்ளது.

ஜூன் 15, 16ல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை..

சென்னை உள்பட புறநகர்ப் பகுதியில் ஏற்கெனவே வெய்யில் கொளுத்திஎடுக்கும் நிலையில், இன்று முதல் ஜூலை 17 வரை வெய்யில் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும்.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

ஜூலை 17ல் விருதுநகர், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கரூர். நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (15-07-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

ஜூலை 15, 16ல் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The Meteorological Department has issued a warning that temperatures in Tamil Nadu will rise above normal levels over the next two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments