கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள்
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை காலை முதல் அனுசரிக்கப்பட்டு வருவது தொாடர்பாக...
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை காலை முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர். இந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி 22 ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள்-உறவினர்கள் தங்களது வீடுகளில் இறந்த குழந்தைகளின் படங்களுக்கு மாலை அணிவித்து, புத்தாடைகள், திண்பண்டங்களை செய்து வைத்து அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீரை அஞ்சலியாக செலுத்தினர்.
மேலும், தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவிலுள்ள பள்ளி முன், இறந்த 94 குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டது. இந்த பதாகைக்கு பெற்றோர்கள், தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல, இறந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த துயர சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆகினும், பிஞ்சு குழந்தைகளை இழந்த தாக்கம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலிருந்து இன்னும் நீங்காத வடுவாக மாறிவிட்டது.
22nd anniversary of the Kumbakonam school fire tragedy that claimed the lives of 94 children
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.