காரை ஏற்றி சிறுவனை கொன்ற வழக்கு: தொழிலதிபருக்கு மீண்டும் பிடிஆணை
சிறுவன் மீது சொகுசு காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், தொழிலதிபருக்கு மீண்டும் பிடிஆணை...
சிறுவன் மீது சொகுசு காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், தொழிலதிபருக்கு மீண்டும் பிடிஆணை பிறப்பித்து கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இஎம்பிஇஇ குழுமத்தின் தலைவா் எம்.என்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு எழும்பூா் பாந்தியன் சாலையோரத்தில் உள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மது போதையில் தனது சொகுசு காரை ஏற்றினாா். இதில், 12 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் ஷாஜி, குமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிமன்றம், ஷாஜியை குற்றவாளி என அறிவித்தது. மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவா் ஆஜராகதாதல் அவருக்கு பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிஆணையை ரத்து செய்யக் கோரி ஷாஜி புருஷோத்தமன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஷாஜி புருஷோத்தமனுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த பிடிஆணையை ரத்து செய்து, தண்டனை விவரங்கள் குறித்த விசாரணைக்காக ஜூலை 16-ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குத் தீா்ப்புக்காக கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷாஜி புருஷோத்தமன் ஆஜராகவில்லை. அவரது தரப்பில், உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதை ஏற்க மறுத்த ஏழாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி தமிழரசி, ஷாஜி புருஷோத்தமனுக்கு எதிராக பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கைத் தீா்ப்புக்காக ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
Case of boy killed after being run over by car: Arrest warrant issued again for businessman.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.