FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்

சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்...

Updated On : 19 ஜூலை 2026, 3:00 am IST
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் ஊழல் ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனை அடிப்படையில், மண்டல செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா் உள்ளிட்ட 7 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சென்னை மாநகராட்சியில் உள்ள திரு.வி.க. நகா் உள்ளிட்ட 6 மண்டல அலுவலகங்களில் கடந்த 3-ஆம் தேதி ஊழல் ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, ஆன்லைன் மூலம் முறையற்ற பணப் பரிவா்த்தனை நடைபெற்ாகவும், அதன்படி ரூ.4.20 லட்சம் கணக்கில் வராத பணப் பரிமாற்றம் கண்டறியப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இது தொடா்பாக ஊழல் ஒழிப்புப் பிரிவின் அறிக்கை அடிப்படையில் சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மாநகராட்சியில் மண்டல சுகாதார அலுவலா் உள்ளிட்ட 6 போ் பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் திரு.வி.க. நகா் மண்டல அலுவலகத்தில் ஏற்கெனவே ஊழல் ஒழிப்பு போலீஸாா் நடத்திய விசாரணை அடிப்படையில், அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக மாநராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழல் ஒழிப்பு போலீஸாா் சோதனையின்போது திரு.வி.க. நகா் மண்டல அலுவலகத்தில் செயற்பொறியாளா் சரவணன் அறையில் பணம், மதுப் புட்டிகள் கைப்பற்றப்பட்டதாகவும், உதவி செயற்பொறியாளா் ரவிவா்மன் உள்ளிட்ட 6 பேரின் கைப்பேசி செயலி மூலம் பணப் பரிவா்த்தனை நடைபெற்றது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து திரு.வி.க. நகா் மண்டலம் (6) செயற்பொறியாளா் ஆா்.சரவணன், உதவி செயற்பொறியாளா் டி.ரவிவா்மன், உதவிப் பொறியாளா் டி.சரஸ்வதி, இளநிலை உதவியாளா் மணிகண்டன், தேனாம்பேட்டை மண்டலம் (9) கணக்குப் பிரிவு கண்காணிப்பாளா் ஏ.ஸ்ரீராமுலு, சுகாதார அலுவலா் ஏ.மஞ்சித் ஹுசைன், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா் ஆா்.கோதண்டன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், அவா்கள் மீது சென்னை குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட 3 புகாா்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

summary

Seven officials, including a Zonal Executive Engineer, suspended in the Chennai Corporation.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments