உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம், ஊழல் இருக்காது! புகார் அளிக்க தனி இணையதளம்!
சென்னையில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி...
உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம், ஊழல் இருக்காது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "ரூ. 4.5 லட்சத்தைவிட அதிக தொகையில் கல்வி கடன் கேட்கும்போது பிணை கேட்கிறார்கள். இதை மாற்றி முதல்வர் விஜய், விரைவில் புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளார். இந்த ஆண்டு 1.5 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கல்வி மட்டும் இருக்கக் கூடாது, கல்வியுடன் கூடிய வேலைவாய்ப்பும் இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"உயர்கல்வித் துறையில் பணி நியமனம், பணி மாறுதல், பதவி உயர்வு என லஞ்சம், ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறையில் இனி லஞ்சம் இருக்காது. இந்த துறையில் யாரேனும் லஞ்சம் கேட்டாலோ, வாங்கினானோ எங்களிடம் தெரிவிக்கலாம். இதற்காக புகார் அளிக்க உயர்கல்வித் துறைக்கென தனி இணையதளம் விரைவில் அறிவிக்கப்படும். அதில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
ஆட்சிக்கு வந்து இன்னும் 60 நாள்கள்கூட ஆகவில்லை. உயர்கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் படிப்படியாக சரிசெய்யப்படும்" என்று கூறினார்.
There will be no more bribery or corruption in the higher education sector: Minister Viswanathan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.