FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்ததற்கான காரணங்களை விளக்கி உத்தரவு பிறப்பிக்க சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 21 ஜூலை 2026, 4:29 am IST
பகிர்:

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்ததற்கான காரணங்களை விளக்கி உத்தரவு பிறப்பிக்க சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தியாகராயநகா் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவா் சத்தியநாராயணன். இவா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.44 கோடிக்கு சொத்து சோ்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரது மனைவி ஜெயசித்ராவுக்கு எதிராகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்புத்துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். இதன் அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து முன்னாள் எம்எல்ஏ சத்தியநாராயணன், அவரது மனைவி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் எம்எல்ஏ தரப்பில், குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் முன்பாக தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்காமல் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ மீதான சொத்துக்குவிப்புவழக்கை விசாரணைக்கு எடுத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கான காரணங்களை விளக்கி சிறப்பு நீதிமன்றம் புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments