புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்
புத்தகப்பை சுமை இனி இல்லை என்று தமிழக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் புத்தகப் பை சுமையும் இனி குறைக்கப்படும், அதனால் மாணவர்களின் மனச்சுமையம் குறையும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் கல்வி இப்போது முதல் மாறுகிறது. கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம். குழந்தைகளை மையமாக வைத்து கல்வி மாறப்போகிறது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கல்வி அளிப்பதோடு, பெற்றோரை மதிக்கும் வகையில் கல்வித் திட்டம் மாற்றப்படும்.
கதைகளின் வடிவில் மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரப்படும். புத்தகப் பை சுமை குறைக்கப்படும். இதனால், மாணவர்களின் மனச்சுமையும் குறையும் என்றார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.